"கோவாக்ஸ் திட்டத்தில் இணைய இந்தியாவுடன் பேச்சுவார்த்தை" WHO
கொரோனாவிற்கான கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தில் சேர, இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வர்ட், தடுப்பூசி விவகாரத்தில் விரிவான அனுபவம் கொண்ட இந்தியா, இத்திட்டத்தில் பங்கேற்பதை நாங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் அனைத்து நாடுகளையும் போன்றே, இந்தியாவிற்கும் இத்திட்டத்தில் சேருவதற்கான தகுதி உள்ளது என்றார். தேவைப்படும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை சரியான முறையில் விநியோகிக்க, உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள திட்டமே கோவாக்ஸ் ஆகும்.
Comments